

பிரீமியம் ஹெச்1பி விசாவுக்கு அமெரிக்கா ஆறு மாதங்களுக்கு தடை விதித்திருக்கிறது. இந்த தடை வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக் கப்பட்டிருக்கிறது. இந்த தடையால் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட் டாலும் ஐடி நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என ஐடி நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் பேசி வருகிறோம். இந்த நடவடிக்கையால் இந்தியாவில் உள்ள பணியாளர்கள் பாதிக்கப் படாதவாறு நடவடிக்கை இருக்கு மாறு கோரிக்கை விடுத்திருக்கி றோம் என நாஸ்காம் தெரிவித் துள்ளது. ஆனால் கார்ட்னர் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் டிடி மிஸ்ரா கூறும்போது, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கூறினார்.
ஐடி நிறுவனங்களுக்கு சமயங்களில் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படும். ஏற்கெனவே திட்டமிடப்படாத சூழ்நிலையில் இதுபோன்ற தேவை உருவாகும். இந்த சூழ்நிலையில் அதிக செலவில் ஆட்களைப் பணியமர்த்த வேண்டி இருக்கும் இல்லையெனில் கால தாமதத்தை பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் மிஸ்ரா கூறினார்.
சாதாரணமாக ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் முடிவு கிடைப்பதற்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும். ஆனால் பிரீமிய முறையில் 1,225 டாலர் கூடுதலாக செலுத்தும் பட்சத்தில் 15 நாட்களில் விண்ணப்பத்துக்குப் பதில் கிடைத்துவிடும்.