Last Updated : 15 Jul, 2016 10:14 AM

 

Published : 15 Jul 2016 10:14 AM
Last Updated : 15 Jul 2016 10:14 AM

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை புரிய தடை: கருப்புப் பணத்தை ஒழிக்க சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரை

மூன்று லட்சம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனை எதுவும் ரொக்கமாக இருக்கக் கூடாது என்று சிறப்புப் புலனாய்வுக்குழு தனது பரிந்து ரையில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல தனி நபர்களிடம் ரூ. 15 லட்சத்துக்கும் அதிகமான தொகை கையிருப்பில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்றும் தனது பரிந்துரையில் நீதிபதி எம். பி. ஷா குறிப்பிட்டுள்ளார்.

கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா உள்ளார். இக்குழு தனது ஐந்தா வது பரிந்துரையை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பான பரிந்துரை களை இக்குழு உச்ச நீதிமன்றத் திடம் அளித்து வருகிறது.

நாட்டில் பெருமளவிலான தொகை அல்லது கணக்கில் காட்டப் படாத சொத்துகள் பெரும்பாலும் ரொக்க கையிருப்பாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று இக்குழு குறிப்பிட்டுள்ளது.

ரொக்க பண பரிவர்த்தனை தொடர்பாக பிற நாடுகளில் நடைமுறையில் உள்ள விதிமு றைகளை ஆராய்ந்த இக்குழு இது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் அளித்துள்ள கருத் துகளையும் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் ரொக்க பண பரிவர்த்தனை விஷயத்தில் உச்ச வரம்பு விதிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இவ்விதம் உச்ச வரம்பு விதிக்கப்படும்போதுதான் கருப்புப் பண பதுக்கலை ஒழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இக்குழு அளித்துள்ள பரிந்துரை யில் ரூ. 3 லட்சத்துக்கு மேலான எந்த பரிவர்த்தனையும் ரொக்கமாக நடைபெறக் கூடாது. அவ்விதம் நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதற்குரிய சட் டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத் தியுள்ளது.

இவ்விதம் ரூ. 3 லட்சத்துக்கு மேலான பரிந்துரைகள் நடைபெற் றால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, அவ்விதம் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் உரிய சட்டம் கொண்டு வரலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத பெரும்பாலான ரொக்கத் தொகை பெரும்பாலும் பணமாகவே கையிருப்பில் உள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் பெருமளவிலான ரொக்கத் தொகை கைப்பற்றப்ப டுகிறது. ஒவ்வொருவரும் கையி ருப்பில் வைத்திருக்க வேண்டிய ரொக்கத் தொகை மீது உச்சபட்ச அளவு வரம்பு விதிக்கப்படுவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும். அதேபோல பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை எந்த ஒரு நிறு வனமோ அல்லது தனி நபரோ ரூ. 15 லட்சத்துக்கு மேலான ரொக்கத் தொகை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டியி ருந்தால் அதற்குரிய அனுமதியை அந்தந்த பகுதி வருமான வரித்துறை ஆணையரிடமிருந்து பெற வேண்டும் என்று நீதிபதி ஷா தலைமையிலான குழு பரிந் துரைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x