Published : 19 Mar 2014 11:08 AM
Last Updated : 19 Mar 2014 11:08 AM

துருவ் ஷிரிங்கி - இவரைத் தெரியுமா?

$ யாத்ரா டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

$ 2006-ம் ஆண்டு 3 நபர்களுடன் இவர் ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் 1400-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிகிறார்கள்.

$ யாத்ரா நிறுவனத்தை ஆரம்பிக்கும் முன் இபுக்கர்ஸ் (Ebookers) நிறுவனத்தில் டெக்னாலஜி மற்றும் செயல்பாட்டு பிரிவுகளின் இயக்குநராகவும், அதற்கு முன் ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தில் (லண்டன்) பிஸினஸ் ஸ்ட்ரேடஜி பிரிவிலும் வேலை பார்த்தவர்.

$ யாத்ரா டாட் காம் இவரது மூன்றாவது தொழில் முனைவு முயற்சி. இதற்கு முன்பு கெமிக்கல் தொழிற்சாலை மற்றும் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனம் அமைத்து தோல்வியடைந்தார். இவர் தனது தந்தையின் மொத்த பென்ஷன் தொகையையும் இதில் இழந்தார்.

$ சி.ஏ. மற்றும். INSEAD கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தவர்.

$ 2011-ம் ஆண்டு பார்ச்சூன் பத்திரிகை இந்தியாவின் 40 முக்கிய சி.இ.ஓ.களின் பட்டியலில் இவரை சேர்த்து கவுரவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x