

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, இன்று காலையில் 20 காசுகள் சரிந்து 61.93 என்ற நிலையில் வர்த்தகமாகி இருந்தது. இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் நிதி அறிக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து காணப்பட்டது.
இதனால் கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவிற்கு, நேற்று மாலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73 காசுகள் அதிகரித்து 61.73 என்ற நிலையில் இருந்தது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அது சரிந்துள்ளது.