

ஸ்நாப்டீல் நிறுவனத்தை 40 கோடி டாலருக்கு வாங்க பிளிப்கார்ட் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 100 கோடி டாலருக்கு வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின்.
அதே சமயத்தில் ஸ்நாப்டீல் நிறுவனத்தை மட்டுமே பிளிப்கார்ட் வாங்க முடிவெடுத்திருகிறது. ஸ்நாப்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக வல்கான் எக்ஸ்பிரஸ் மற்றும் யுனிகாமர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களை தவிர்த்து ஸ்நாப்டீலை மட்டுமே கையகப்படுத்த பிளிப்கார்ட் திட்டமிட்டிருக்கிறது.
இந்த இரு துணை நிறு வனங்களின் மதிப்பு 20 கோடி
டாலர் என மதிப்பிடப்பட்டிருக் கிறது.
நிறுவனங்கள் இணைப்பு தொடர்பாக முதலீட்டாளர்கள், நிறுவனர்களிடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டன. இருந்தாலும் எப்போது கையகப்படுத்துவது என்பதில் இரு நிறுவனங்களாலும் முடிவெடுக்க முடியாத சூழல் இருக்கிறது.
ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ஜூலை முதல் வாரத்தில் இந்த இணைப்பு இருக்கலாம் என தெரிவித்தார்.