Published : 05 Mar 2014 11:04 AM
Last Updated : 05 Mar 2014 11:04 AM

அஜித் ஜெயின் - இவரைத் தெரியுமா?

$ இந்தியாவில் பிறந்த அஜித் ஜெயின், வாரன் பபெட் நிறுவனமான பெர்க்ஷையர் குழுமத்தில் ரீ இன்ஷூரன்ஸ் பிரிவுக்கு தலைமை தாங்குகிறார்.

$ 1985-ம் ஆண்டிலிருந்து சுமார் 30 வருடங்கள் வாரன் பஃபெட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

$ பெர்க்‌ஷயர் நிறுவனத்துக்கு முன்பு மெக்கென்ஸி நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார்.

$ என்னுடைய உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், அஜித் ஜெயின் உடல்நிலைதான் முக்கியம் என்று சில வருடங்களுக்கு முன்பு வாரன் பபெட் தெரிவித்தார். சமீபத்தில் வாரனை ஐடியா பேக்ட்ரி என்றும் தெரிவித்திருக்கிறார்.

$ வாரனுக்கு பிறகு பெர்க்‌ஷயர் நிறுவனத்தின் தலைவர் ஆகும் வாய்ப்பு அஜித்க்கு இருக்கிறது.

$ ஐ.ஐ.டி. கரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். சில காலம் இந்தியாவில் பணியாற்றி, ஹார்வேர்டு பிஸினஸ் கல்லூரியில் எம்பிஏ படித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x