Published : 04 Nov 2014 11:37 AM
Last Updated : 04 Nov 2014 11:37 AM

ரமேஷ் சவுகான் - இவரைத் தெரியுமா?

$ பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர். 1967-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். மேலும் தம்ஸ் அப், லிம்கா, கோல்ட் ஸ்பாட் மாஸா, சிட்ரா உள்ளிட்ட குளிர்பானங்களை ஆரம்பித்தவரும் இவரே.

$ 1993-ம் ஆண்டு பிஸ்லெரி தவிர மற்ற அனைத்து குளிர்பானங்களையும் 6 கோடி டாலருக்கு கோக கோலா நிறுவனத்திடம் விற்றுவிட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அதனால் வருத்தம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

$ அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. நிர்வாகக் கல்லூரியில் நிர்வாக படிப்பு முடித்தவர். 1961-ம் ஆண்டு தன்னுடைய குடும்பத் தொழிலை கவனிக்க ஆரம்பித்தார்.

$ சரக்கு போக்குவரத்திலும் இவர் ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுக்க 2000 லாரிகள் இவருக்கு இருக்கிறது.

$ தகவல் தொகுப்பு விவரங்களைவிட விட தொழில் முடிவுகளை எடுப்பதற்கு உள்ளுணர்வு முக்கியம் என்று சொல்லியவர்.

$ சமீபத்தில் கஃபீன் இல்லாத உர்ஸா (Urzza) என்னும் ஊட்டசத்து பானத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x