குறைந்த செலவில் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்கும் ஸ்நைடர் எலெக்ட்ரிக் ‘நோமெட் டெஸ் மெர்ஸ்’ படகு சென்னை வருகை
குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களைக் கொண்டு, உயர் தரத்திலான சேவைகளை உருவாக்குவதற்கான முயற்சிக ளில் ஸ்நைடர் எலெக்ட்ரிக் ஈடுபட்டுள்ளது. எளிதில் வடிவமைக்கக்கூடிய, சூழலுக்கு பொருந்தும் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஸ்நைடர் எலெக்ட்ரிக் தயாரிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட `நோமெட் டெஸ் மெர்ஸ்’ படகு உலகம் முழுவதும் சுற்றி வருகிறது.
இந்த படகில் உள்ள குழுவினர் உலகம் முழுவதும், குறைந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பாக விழிப்புணர்வு, மாற்று எரிசக்திகளுக்கான தீர்வுகளை வழங்கி வருகின்றனர். 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பிரிட்டானி துறைமுகத்தில் பயணத்தைத் தொடங்கிய இந்த படகு குழுவினர் தற்போது சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளனர். இதனையொட்டி பொறியியல் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களிடத்தில் குறைந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்கான திறன் சார்ந்த போட்டிகளை ஸ்நைடர் நடத்துகிறது. இந்த படகில், சுற்றுச் சூழலுக்கு உகந்த, குறைந்த செலவில் அதிக பயன்பாடு கொண்ட எளிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளாக இந்த படகு உலகை சுற்றி வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்நைடர் எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவர் ரமேஷ் பதக் பேசுகையில், ``தொலைதூர கிராமங்களுக்கு எரிசக்தி தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும். அதற்கான எளிய தொழில்நுட்ப முயற்சிகளில் ஸ்நைடர் ஈடுபட்டு வருகிறது. குறைவான செலவிலான தொழில்நுட்பத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கும் எரிசக்தி தீர்வுகள் கிடைக்கும். அதுபோல மின்சார சேமிப்புக்கான தொழில்நுட்ப முயற்சிகளிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் சூழல் பாதுகாப்பையும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.
