

ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம் ரூ. 100 கோடியை விரிவாக்க நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்ய உள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜான் கே ஜான் கூறியதாவது:
அதிக செயல்திறன் கொண்ட எஸ்கலேட்டர்ஸுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த துறையின் எதிர்கால வாய்ப்பு களை பயன்படுத்திக் கொள் ளும் வகையில் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தற்போது 13 விமான நிலையங்கள் உள்பட பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் நடை பாலங்களில் அதிக செயல்திறன் கொண்ட 100 எஸ்கலேட்டர்களை நிறுவியுள்ளோம். இந்தியா முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் இதை அமைப்பதற்காக அரசு திட்டமிட்டு வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் மேலும் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்தியாவில் அமைய உள்ளன. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறோம் என்றார்.
சர்வதேச போட்டி
இந்தத் துறையில் சர்வதேச நிறுவனங்களின் போட்டி இருந் தாலும் தற்போது எஸ்கலேட்டர் பிரிவில் 36 சதவீத சந்தையையும், எலிவேட்டர் பிரிவில் 20 சதவீத சந்தையையும் ஜான்சன் வைத்துள்ளது. இந்நிறுவனம் 85 சதவீத பாகங்களை சொந்தமாக தயாரிக்கிறது என்றும், 15 சதவீத பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்வதாகவும் ஜான் குறிப்பிட்டார்.