கேஒய்சி படிவம் தாக்கல் செய்யாத வாடிக்கையாளர் கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிந்துரை

கேஒய்சி படிவம் தாக்கல் செய்யாத வாடிக்கையாளர் கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிந்துரை
Updated on
1 min read

தங்களைப் பற்றிய விவரத்தை தாக்கல் செய்யாத (கேஒய்சி) வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்குமாறு பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கும் இதுபோன்ற சுற்றறிக்கையை கடந்த மாதம் ரிசர்வ் வங்கி பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இத்தகைய படிவத்தை பூர்த்தி செய்து அளிக் காத வாடிக்கையாளர்களின் கணக்குகளை பகுதியளவில் முடக்குவது அல்லது வங்கிக் கணக்குகளை அவர்கள் முடித்துக் கொள்ள விரும்பினால் அதை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

பகுதியளவில் கணக்கு பரிவர்த்தனைகளை நிறுத்தி 6 மாதங்களுக்குப் பிறகும் இத்தகைய படிவத்தைத் தாக்கல் செய்யவில்லையெனில் அத்தகைய கணக்குகளில் அனைத்து நடவடிக்கைகளையும் முற்றிலுமாக முடக்க வேண்டும். இத்தகைய கணக்குகளை செயல்படாத கணக்குகளாக மாற்ற வேண்டும் என்று ஆர்பிஐ அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதத்தை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. இந்த காலத்தில் வாடிக்கை யாளர் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும். குறைவான சிக்கல் உடைய வாடிக்கையாளர் எனில் அவர் களிடமிருந்து புதிதாக சான்று கோரத் தேவையில்லை. வாடிக்

கையாளர் விவரத்தை குறிப்பிட்ட இடைவெளியில் பதிவு செய்து கொண்டாலே போதும் என்றும் அத்தகைய சமயத்தில் வாடிக்கையாளர் வங்கிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று தன்னைப் பற்றியே வாடிக்கையாளர் அளிக்கும் உறுதி மொழி படிவம்தான் கேஒய்சி-யாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in