யாரா பெர்டிலைசர்ஸ் நிறுவனத்துக்கு யூரியா பிரிவை விற்றது டாடா கெமிக்கல்ஸ்

யாரா பெர்டிலைசர்ஸ் நிறுவனத்துக்கு யூரியா பிரிவை விற்றது டாடா கெமிக்கல்ஸ்
Updated on
2 min read

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தன்னு டைய யூரியா பிரிவை யாரா பெர் டிலைசர்ஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டது. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.2,670 கோடி ஆகும். டாடா கெமிக் கல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு நேற்று கூடி இந்த முடிவை எடுத்தது. இந்த இணைப்பில் யூரியா தொழிலில் உள்ள சொத்துகள், கடன் என அனைத்து விஷயங்களும் அடங் கும். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாப்ரலா உற்பத்தி ஆலை யும் இதில் அடங்கும். இருந்தாலும் சிறப்பு பொருட்கள் மற்றும் சில உரங்கள் அடங்காது எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு 9 முதல் 12 மாதங்களில் முழுமை யடையும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

பாரஸ், டிகேஸ் மற்றும் தக்‌ஷா உள்ளிட்ட பிராண்டுகள் டாடா கெமிக்கல்ஸ் வசம் இருக்கும். யூரியா பிரிவை விற்றதன் மூலம் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்த முடியும் என்றும், இந்த தொகை மூலம் புதிய வாய்ப் பிருக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நெட்வொர்க் வைத்திருக்கும் யாரா நிறுவனத்துக்கு யூரியா பிரிவை பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியாவில் யூரியா உற்பத்தி செய்வது மற்றும் விற்பது என்பது அரசாங்கம் நிர்ணயம் செய்யும் விலையை பொறுத்தது. இதற்கு அரசு மானியம் கொடுக்கிறது. ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மானியம் கொடுக்கிறது. முந்தைய வருடத்தின் விற் பனையை பொறுத்து மானியம் வழங்கப்படுகிறது. மேலும் வழங்கப் படும் மானியமும் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. இதனால் அன் றாட செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஜூன் காலாண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு வர வேண்டிய மானி யம் ரூ.1,479 கோடி ஆகும். தவிர மார்ச் 31, 2016 வரை இந்த நிறுவனத் தின் கடன் ரூ.8,694 கோடி ஆகும்.

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் ஆர்.முகுந்தன் கூறும் போது, குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களாக ராலிஸ் இந்தியா மற்றும் மெத்தாலிக்ஸ் (Metahelix) ஆகிய நிறுவனங்கள் மூலம் விவசாயத் தொழிலில் கவனம் செலுத்த இருக்கிறோம் என்றார்.

நார்வே நாட்டை சேர்ந்தது யாரா இண்டர்நேஷனல் நிறுவனம். எங்களுடைய வளர்ச்சியில் இது முக்கியமான நடவடிக்கையாகும். இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தரம் உயர்ந்து வருவதால் விவசாய உற் பத்தி உயரும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்வின் டோரெ ஹோல்ஸ்தெர் (Svein Tore Holsether) கூறினார்.

மேலும் பாப்ரலாவில் உள்ள தொழிற்சாலை சர்வதேசதரத்தில் உள்ளது. பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. தரமான பணியா ளர்கள் உள்ளனர். யாரா நிறுவனத் தின் சர்வதேச உற்பத்திக்கு இவை வலுசேர்க்கும் என்றார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஆண்டுக்கு 7 லட்சம் டன் அம்மோனியா மற்றும் 12 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யும் திறன் உடையது. 1994-ம் ஆண்டு இந்த ஆலை செயல்படத் தொடங்கியது.

1905-ம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 1990-ம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட நாடு களில் இந்த நிறுவனம் செயல் படுகிறது.

யாரா நிறுவனம் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை வாங்குவது குறித்து விளக்கும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ஆர்.முகுந்தன் மற்றும் யாரா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் டெர்ஜெ நட்சென் (Terje Knutsen.)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in