

இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் இருக்கும் பண்ட் மேலாளர்களில் பெண்களின் பங்கு 7 சதவீதம் மட்டுமே இருக்கிறது. சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும். ஓபன் எண்டட் திட்டங்களை கையாளும் 269 பண்ட் மேனேஜர்களில் 18 பேர் மட்டுமே பெண்கள் ஆகும். இவர்கள் கையாளும் சொத்து மதிப்பு ரூ.2,32,000 கோடி ஆகும். மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பில் இவை 15 சதவீதமாகும்.
ஆனால் ஹாங்காங், சிங்கப்பூர், பிரான்ஸ், ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருக்கும் பண்ட் மேலாளர்களில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பெண்கள் உள்ளனர். கோடக், ரிலையன்ஸ், பிராங்கிளின் டெம்பிள்டன், எஸ்பிஐ, யூடிஐ ஆகிய நிறுவனங்களில் பெண்கள் பண்ட் மேலாளர்களாக இருக்கின்றனர். மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவு பிப்ரவரி மாத இறுதியில் ரூ.17.89 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.