

இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா இண்டர் நேஷனல் நிறுவனம் தமிழக சந்தை யில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் மொபைல் சந்தையில் ஏற்கெனவே 19 சதவீத சந்தையை வைத்துள்ள லாவா அதை மேலும் அதி கரிக்க திட்டமிட்டுள்ளது. தென் மாநிலங்களில் லாவா இண்டர் நேஷனல் நிறுவனத்தின் செயல் பாடுகள் குறித்து நேற்று சென்னை யில் நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், தென் பகுதி தலைவருமான லூக் பிரகாஷ் மற்றும் சந்தை மற்றும் தகவல் தொடர்பு தலைவர் சாலமன் வீலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய லூக் பிரகாஷ், ‘ லாவா இண்டர்நேஷனல் நிறுவனம் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை சந்தையாக வைத்து இயங்கி வருகிறது. 2014-15 ஆண்டைக் காட்டிலும் 2015-16 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் லாவா மொபைல் விற்பனை 67 சதவீதம் அதிகரித்துள்ளது. தற் போது வரை தமிழ்நாட்டில் 6780 சில்லரை மொபைல் விற்பனை மையங்களில் லாவா போன் விற்பனையாகி வருகிறது. இதை 8000 விற்பனை மையங்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சாலமன் வீலர் பேசும்போது, ‘இந்திய அளவில் லாவா மொபைல் 10.5 சதவீத சந்தையை வைத்துள் ளது. 2015-16 நிதியாண்டில் நிறு வனத்தின் ஆண்டு பரிவர்த்தனை ரூ.7,626 கோடியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விற் பனையை அதிகரிக்கும் விதமாக ஏப்ரல் மாதத்திலிருந்து கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி விளம்பர தூதராகவும் நிறுவனம் நியமித்துள் ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவை தலைமையக மாகக் கொண்ட இந்த நிறுவனம் சர்வதேச அளவில் மொபைல் போன் விற்பனை சந்தையில் உள்ளது.