சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் அபராதம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் அபராதம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
Updated on
1 min read

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை எனில் அபராதம் விதிக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவு செய்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராதம் அமலுக்கு வரும்.

பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.

50 சதவீதம் முதல் 75 சதவீத பற்றாக்குறை இருந்தால் 75 ரூபாயு டன் கூடுதல் வரி, 50 சதவீதத்துக்கு கீழ் பற்றாக்குறை இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரி செலுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் ரூ.20 முதல் 50 வரை அபராதம் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.

அதேபோல வங்கிக் கிளைகளில் 3 முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்யும்பட்சத்தில் 50 ரூபாய் கட் டணம் வசூலிக்கப்படும். ஒரு மாதத்தில் ஏடிஎம் மூலம் 10 இல வச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப் படுவதால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு வருவதற்கான அவசியம் இல்லை என எஸ்பிஐ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in