பிஎப் பணத்தை பயன்படுத்தி வீடு வாங்க முடியும்: விரைவில் இபிஎப்ஓ புதிய திட்டம்

பிஎப் பணத்தை பயன்படுத்தி வீடு வாங்க முடியும்: விரைவில் இபிஎப்ஓ புதிய திட்டம்
Updated on
2 min read

வருங்கால வைப்பு நிதியை அடமானம் வைத்து பணியாளர்கள் வீடு வாங்கிக்கொள்வதற்கான திட் டத்தை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) விரைவில் கொண்டு வர இருக் கிறது. மேலும் எதிர்காலங்களில் செலுத்த வேண்டிய கடன் தொகை யை பிஎப் பணத்தில் இருந்து மாதாந்திர தவணை தொகையாக கட்டிக்கொள்ளும் வசதியையும் கொண்டு வர இருக்கிறது. இதன் மூலம் 4 கோடி பிஎப் சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.

இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால் கூறியதாவது: பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது பிஎப் பணத்தை பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை கொண்டு வர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த முன்வரைவை அடுத்த மாதம் இபிஎப்ஓ அறங்காவலர் கூட்டத்தின் முன்பு வைக்கப்படும். நாங்கள் சந்தாதாரர்களை கட்டாயப் படுத்தமாட்டோம். அதாவது அவர்களுக்காக நிலத்தை வாங்கித் தருவதையோ வீடுகளை கட்டித் தருவதையோ நாங்கள் செய்ய மாட்டோம். வெளிச்சந்தையில் அவர் களாகவே வீடுகளை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு சங்கர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இபிஎப்ஓ அறங்காவலர் குழு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய பிறகு இந்த திட்டத்தை சந்தாதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் சந்தாதாரர்கள் எவ்வளவு தொகை வரை பயன்படுத்தி வீடு வாங்க முடியும், இந்த திட்டத்தின் கீழ் பயனடைவதற்கு என்னென்ன வரைமுறைகள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தனது மொத்த பணிக்காலத்திலும் வீடு வாங்க முடியாதவர்கள் மற்றும் இபிஎப்ஓ-வில் கணக்கு வைத்துள்ள குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தை கொண்டு வர வரைவு குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த திட்ட வரைவின்படி, சந்தா தாரருடன் வங்கிகள் / வீடு கட்டும் நிறுவனங்கள் மற்றும் தொழி லாளர் வைப்பு நிதி ஆணையம் மூன்று தரப்பும் ஒப்பந்தம் மேற் கொள்ளப்படும். மேலும் சந்தாதாரர் களின் எதிர்கால பிஎப் தொகையை வீட்டுக் கடனுக்கு இஎம்ஐ-ஆக மாற்றிக்கொள்ளும் திட்டமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி நடந்த இபிஎப்ஓ அறங்காவலர் கூட்டத்தின் பட்டியலில் இது குறித்த முன் வரைவு பேசப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த விலை வீடுகள் திட்டத்தில் சந்தாதாரர்களின் எதிர்கால பிஎப் பங்களிப்பை இணைத்துக் கொள்ள உறுப்பினர் களின் உறுதிமொழியை வாங்குவது குறித்து பேசப்பட்டது.

சந்தாதாரர்களது பிஎப் நிதியிலிருந்து முன்பணமும், மாதாந் திர தவணை தொகைக்கு எதிர் கால பிஎப் பணத்தை இணைத்துக் கொள்வதும் இந்த திட்டத்தின் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என அறங்காவல் குழு ஒருமனதாக பரிந்துரை செய்தது. மேலும் வீட்டு வசதி மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு அமைச்சக திட்டத்தின் கீழ் பயன்களையும் இந்த திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்தது.

கடந்த மே மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வ மாக அளித்த பதிலில், சந்தாதாரர்கள் மற்றும் பணியாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்கிக் கொள்ளும் திட்டத்தை கொண்டு வர சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in