Published : 29 Apr 2014 12:54 PM
Last Updated : 29 Apr 2014 12:54 PM

ஸ்வராஜ் பால்- இவரைத் தெரியுமா?

$ பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்த இவர், இங்கிலாந்தில் முக்கியமான Caparo குழுமத்தை நிறுவியவர்.

$ பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவில் இருக்கும் Massachusetts Institute of Technology - யில் முதுகலை பட்டமும் படித்து முடித்த பிறகு தனது தந்தையின் ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தார்.

$ 1966-ம் ஆண்டு தன்னுடைய மகளின் ரத்தப் புற்று நோயை குணப்படுத்துவதற்காக இங்கிலாந்து சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார்.

$ 1968-ம் ஆண்டு அங்கிருக்கும் ஒரு ஸ்டீல் ஆலையை வாங்கியவர், 1978-ல் Caparo குழுமத்தை உருவாக்கினார்.

$ 1996-ம் ஆண்டு நிறுவனத்தின் பொறுப்புகளை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டார்.

$ இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பல விருதுகளைப் பெற்று இருக்கிறார். 1983-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x