Published : 15 May 2017 07:59 AM
Last Updated : 15 May 2017 07:59 AM

பான் அட்டை, ஆதார் எண்ணில் தவறுகளை களைய புதிய வசதி: வருமான வரித்துறை அறிமுகம்

பான் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளில் தவறான விவரங்கள் இருந்தால் ஆன்லைன் மூலமாக சரிசெய்து கொள்ளும் வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைத்து கொள்ளும் வசதியை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக இரண்டு இணையதள ஹைப்பர்லிங்கை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒன்றில் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைக்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணில் ஏதேனும் மாறுதல் செய்யவேண்டுமென்றாலும் அல் லது புதிய பான் எண்ணுக்கு விண்ணபிக்க வேண்டுமென்றாலும் இந்த இணைப்பை பயன்படுத்த லாம்.

ஆதார் அட்டையில் பெயர் அல்லது மற்ற விவரங்கள் தவறாக இருந்தால் சரிசெய்து கொள்வதற்கு இரண்டாவது இணைப்பை பயன்படுத்தலாம். ஆதார் அட்டையில் நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஸ்கேன் செய்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே 1.22 கோடி பேர் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 25 கோடி மக்கள் இந்தியாவில் பான் எண் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 111 கோடி பேர் இந்தியாவில் ஆதார் அட்டை வைத்துள்ளனர். வரித்துறை தகவலின்படி 6 கோடி பேர் தற்போது வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர்.

நிதி மசோதா 2017-18ன் படி வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டது. மேலும் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை கடந்த வாரம் வரித்துறை அறிமுகம் செய்தது.

ஆதார் எண், பான் எண் ஆகிய இரண்டிலும் ஒரே மாதிரியான விவரங்கள் இருக்க வேண்டும். ஒரே மாதிரியான விவரங்கள் உள்ளனவா என்பதை தனிநபர் அடையாள ஆணைய விவரங்களோடு சரிபார்க்கப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பது முடிவடையும். ஒருவேளை விவரங்கள் பொருந்த வில்லையென்றால் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைத் தேர்வு செய்து அதை மொபைல் மூலம் உறுதி செய்துகொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x