மொபைல் பேமெண்ட் சேவையை தொடங்கியது சாம்சங்

மொபைல் பேமெண்ட் சேவையை தொடங்கியது சாம்சங்
Updated on
1 min read

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங் மொபைல் பேமெண்ட் சேவையைத் தொடங்கியுள்ளது. `சாம்சங் பே’ என்ற பெயரில் மொபைல் பேமெண்ட் சேவையை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

`சாம்சங் பே’ தளத்தை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது, பல்வேறு கட்டணங்களை செலுத்துவது போன்றவற்றை செய்துகொள்ள முடியும். இந்த சாம்சங் பே தளத்தோடு பேடிஎம் மற்றும் மத்திய அரசின் யுபிஐ போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் சாம்சங் நிறுவனம் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டு, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி போன்றவற்றோடு ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு தனித்துவமான டிஜிட்டல் பேமெண்ட் சேவையை உருவாக்கியுள்ளது.

சாம்சங் பே சேவை சில குறிப்பிட சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது 20,000 ரூபாய்க்கு அதிகமான ஸ்மார்ட்போன்களில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கேலக்ஸி எஸ்7 எட்ஜ், கேலக்ஸி எஸ்7, கேலக்ஸி நோட் 5, கேலக்ஸி நோட் எஸ்6 போன்ற ஸ்மார்ட்போன்களில் சாம்சங் பே தளத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

``சாம்சங் பே மூலம் பாதுகாப்பான பரிவர்த்தனையை மேற்கொள்ளமுடியும். பாது காப்பு பரிவர்த்தனைக்காக நோக்ஸ் தளத்தில் இதை வடி வமைத்துள்ளோம். கைரேகை மூலம் இந்த பேமெண்ட் சேவை யை பயன்படுத்திக் கொள்ள முடியும்’’ என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மொபைல் தொழில் பிரிவின் துணைத்தலைவர் அசீம் வார்சி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in