Last Updated : 11 Jul, 2016 09:47 AM

 

Published : 11 Jul 2016 09:47 AM
Last Updated : 11 Jul 2016 09:47 AM

டிசிஎஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 4 பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி சரிவு

சந்தை மதிப்பில் முதல் பத்து இடங்களில் இருக்கும் பங்குகளில் 4 பங்குகள் கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்தன. இந்த நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி அளவுக்கு சரிந்துள்ளன. டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன.

அதிகபட்சமாக டிசிஎஸ் பங்கின் சந்தை மதிப்பு ரூ.15,034 கோடி சரிந்து 4,77,927 கோடி ரூபாயாக இருக்கிறது. இன்போசிஸ் பங்கின் சந்தை மதிப்பு ரூ.3,066 கோடி சரிந்து 2,66,158 கோடி ரூபாயாக இருக்கிறது. ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ.641 கோடி சரிந்து1,91,300 கோடி ரூபாயாக இருக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.430 கோடி சரிந்து 2,97,158 கோடி ரூபாயாக இருக்கிறது.

மாறாக ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்யூஎல், கோல் இந்தியா மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளன. ஐடிசி பங்கு போனஸ் வழங்கியுள்ளதால் இந்த பங்கின் சந்தை மதிப்பை ஒப்பிட முடியாது.

ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பு ரூ. 6,051 கோடி உயர்ந்து 2,02,960 கோடி ரூபாயாக இருக் கிறது. ஹெச்யூஎல் சந்தை மதிப்பு ரூ. 4,782 கோடி உயர்ந்து 1,99,153 கோடி ரூபாயாக உள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x