Published : 07 Nov 2014 09:50 AM
Last Updated : 07 Nov 2014 09:50 AM

ஜிடிபி உயர சேமிப்பை அதிகரிக்க வேண்டும்

இந்தியாவின் சேமிப்பு உயரும் போதுதான் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7 முதல் 8 சதவீதம் வரை உயரும் என்று வெளிநாட்டு தரகு நிறுவனமான ஹெச்.எஸ்.பி.சி. தெரிவித்திருக்கிறது. இப்போதைக்கு இந்திய சேமிப்பில் ஜிடிபியின் பங்கு 30 சதவீதமாக இருக்கிறது. குறைந்தபட்சம் இன்னும் 5 சதவீதம் அதாவது ஜிடிபியில் 35 சதவீத அளவுக்கு சேமிப்பு இருக்கும் பட்சத்தில்தான் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. கடந்த 2008-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் சேமிப்பு விகிதம் 36.9 சதவீதமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு பொருளாதார சூழ்நிலைகள் பலவீனமானதால் சேமிப்பு குறைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x