

அமெரிக்காவைச் சேர்ந்த முன் னணி நிறுவனமான சிஸ்கோ கேபிடல் நிறுவனத்தின் தலைவர். 2009-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2006-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை சிஐடி குழுமத்தின் குளோபல் வெண்டார் பைனான்ஸ் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
1989-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
அமெரிக்காவில் கோன்சாகா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் கல் பிரிவில் இளநிலை பட்டமும் செயின்ட் மேர் கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒய்டபிள்யூசிஏ அமைப்பு வழங்கும் பெண்கள் சாதனையாளருக்கான விருதை 2012-ம் ஆண்டு வென்றவர்.
2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இஎல்எப்ஏ கூட்டமைப்பின் இயக்குநர் குழு கூட்டத்தில் உறுப்பினராக இருந்தவர்.