Published : 27 Sep 2016 11:12 AM
Last Updated : 27 Sep 2016 11:12 AM

இவரைத் தெரியுமா?- விநீத் அகர்வால்

விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் நிறுவனங்களின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். 2002 ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

1995-ம் ஆண்டில் விப்ரோவில் விற்பனை மற்றும் சந்தையிடுதல் துறையில் பணிக்குச் சேர்ந்தவர். 1999-ம் ஆண்டில் விப்ரோ பெரிபெரல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், 2000-ஆவது ஆண்டில் கார்ப்பரேட் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

விப்ரோ நுகர்வோர் பொருட்களின் சர்வதேச விரிவாக்கத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, வியத்நாம், இந்தோனேசியா மற்றும் சீனாவில் விரிவாக்கம் செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.

லண்டனைச் சேர்ந்த யார்ட்லி பிராண்டை கையகப்படுத்தி, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மீண்டும் சந்தைப் படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

புது டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டமும், மும்பை ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x