

தென் ஆப்பிரிக்காவில் இண்டர்நெட் சேவையை வழங்கும் தன்னுடைய துணை நிறுவனமான நியோடெல் நிறுவனத்தை விற்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ். லிக்விட் டெலி காம் குரூப், நியோடெல் நிறு வனத்தை வாங்குகிறது. இகோநெட் வயர்லெஸ் குளோபல் நிறுவனம் லிக்விட் டெலிகாம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது.
முன்னதாக நியோடெல் நிறு வனத்தை வோடபோன் நிறுவனத் தின் ஆப்ரிக்க துணை நிறுவனத் திடம் விற்க பேச்சுவார்த்தை நடத் தியது டாடா கம்யூனிகேஷன்ஸ். ஆனால் இரு வருடங்களாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் லிக்விட் டெலிகாம் நிறுவனத்திடம் விற்க முன்வந்திருக்கிறது.
இந்த இணைப்பு நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் முடிவடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 2,900 கோடிக்கு இந்த நிறுவனம் விற்கப்படுகிறது. இந்த தொகை நிறுவனத்தின் கடனை குறைக்க உதவும் என்று டாடா கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு ரூ.12,000 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது.
நியோடெல் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல லிக்விட் சரியான நிறுவனம் என்று டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் குமார் தெரிவித்தார். லிக்விட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ருட்நிக் கூறும் போது நியோடெல் நிறுவனத்தில் முதலீட்டை தொடர்ந்து அதிகரிக் கும். இந்த இணைப்பு மூலம் ஆப்பிரிக்காவில் பெரிய இண்டர் நெட் சேவை வழங்கும் நிறுவனமாக உயரும் என்று தெரிவித்தார். இப்போது ஆப்பிரிக்கா கண்டத்தில் 12 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு நியோ டெல் நிறுவனத்தின் 68.5 சதவீத பங்குகளை டாடா கம்யூனி கேஷன்ஸ் வாங்கியது.