

நடப்பாண்டில் இந்தியாவில் ரூ.1,600 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதி காரி மினோரு கட்டோ கூறினார்.
கோவையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியாவில் 50 லட்சம் வாகனங்களை விற் பனை செய்துள்ளோம். நடப்பாண் டில் 64 லட்சம் வாகனங்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்தியாவில் நடப்பாண்டில் மொத்தம் ரூ.1,600 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். கர்நாடக மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் தொழிற்சாலையின் பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடைந்து, செயல்பாட்டுக்கு வரும். புதிதாக 2 மோட்டார் சைக்கிள் மற்றும் 2 ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதுவரை இந்தியாவில் ரூ.9,500 கோடி முதலீடு செய்துள்ளோம்.
தற்போது இந்தியாவில் தயாராகும் வாகனங்களை, அருகில் உள்ள இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். 2020-ம் ஆண்டுக்குள் பி.எஸ்.6 வகை என் ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனங் கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். அப்போது அமெரி்க்கா, ஐரோப்பா உட்பட அனைத்து நாடுகளுக்குமே இந்தியாவிலிருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்தியாவில் மோட்டார் சைக் கிள்களை விட, ஸ்கூட்டர்களின் விற்பனை விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேசிய அளவில் 30% வளர்ச்சியும், தமிழகத் தில் 46% வளர்ச்சியும் உள்ளது.
இருசக்கர வாகனங்கள் விற்பனையில் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிராவுக்குப் பிறகு தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. எனினும், ஸ்கூட்டர் விற்பனையைப் பொருத்தவரை தமிழகம் முன்னிலையில் உள்ளது. சென்னைக்கு அடுத்து 2-வது மண்டல அலுவலகத்தை கோவையில் தொடங்கியுள்ளோம்.
போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் பணியிலும் ஹோண்டா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.