

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிகளில் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது. குறிப்பாக கணக்கில் வராத பணம் அதிக அளவு டெபாசிட் செய்யப்பட்டது. இதை கண்டறிய வருமான வரித்துறை பணத் தூய்மை திட்டத்தை அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி வங்கி கணக்குகளை வரிச் செலுத் துபவர்களின் விவரங்களோடு ஒப் பிட்டு பார்த்துள்ளதாகவும், டெபாசிட் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது என்று 18 லட்சம் பேரிடம் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரித்துறை கணக்குப் படி 3.65 கோடி பேர் வருமான வரித்தாக்கல் செய்கின்றனர். தவிர 2014-15 வரி விதிப்பு ஆண்டின்படி 7 லட்சம் கம்பெனிகள், 9.40 லட்சம் இந்து கூட்டு குடும்பங்கள், 9.18 நிறுவனங்கள் வரித்தாக்கல் செய்துள்ளன. மேலும் 25 கோடி ஜன் தன் கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டிருக்கின்றன.
வருமான வரித்துறை அனைத்து வகையான கணக்குகளையும் ஆராய்ந்து வருகிறது. பணத் தூய்மை திட்டத்தின் கீழ் சந்தேகத்திற்குரிய வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்குகளுக்கு இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக தகவலை அனுப்பியுள்ளது.
முதல்கட்டமாக 1 கோடி கணக்குகளை அவர்களின் வருமான வரி விவரங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்த 18 லட்சம் பேர் சந்தேகத்துகுரிய முறையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் அதிக வங்கிகள் கணக்குகள் வரி விவரங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணத் தூய்மை திட்டம் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. நவம்பர் 10 தேதி முதல் டிசம்பர் 30 வரை ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு அது சந்தேகத்துக்கு உரியதாக இருந்தால் வருமான வரித்துறை விளக்கம் கேட்டு இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது.
சரியான விளக்கத்தைக் கொடுத் தால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படும். இந்த தகவல் இ-மெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்கப்படும். விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகை யில் இல்லையென்றால் துணை ஆணையரோ அல்லது ஆணை யரோ நோட்டீஸ் கொடுப்பது பற்றி முடிவெடுப்பார்கள் என்று தகவல் கள் தெரிவிக்கின்றன.
பிடிஐ.
5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்த 18 லட்சம் பேர் சந்தேகத்துகுரிய முறையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது.