Last Updated : 03 Jan, 2017 09:47 AM

 

Published : 03 Jan 2017 09:47 AM
Last Updated : 03 Jan 2017 09:47 AM

உணவு விடுதிகளில் சேவை சரியில்லை எனில் சேவைக் கட்டணம் செலுத்த தேவையில்லை: மத்திய அரசு விளக்கம்

உணவகங்களில் உங்களுக்கு அளிக்கப்படும் சேவை திருப்தி கரமாக இல்லையெனில் நீங்கள் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. திருப்தி இல்லாத சேவைக்காக சேவைக் கட்டணம் செலுத்த மறுக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை அளித்துள்ள விவரம் வருமாறு:

சேவைக் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு அளித்த விளக்கத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது. பொதுவாக உணவகங்களில் சாப்பிடும் உணவுக்கு, அங்கு வழங்கப்படும் சேவைக்கென சேவைக் கட்டணத்தையும் சேர்த்து பில்லாக அளிக்கப்படும். சேவைக் கட்டணமானது 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உள்ளது. இது தவிர டிப்ஸ் எனப்படும் சப்ளையருக்கு அளிக்கப்படும் தொகை இதில் இடம்பெறாது.

சேவைக் கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோரிடமிருந்து வசூலிப்பது முறையற்ற வர்த்தக நடவடிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் என்பது, வாடிக்கையாளருக்கு அளிக்கப் படும் சேவை திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் வசூலிக்கப்பட வேண்டியதாகும். இதை அளிப்பது குறித்து நுகர்வோர் தீர்மானிக்கலாம் என்று இந்திய ஹோட்டல் சங்கமும் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இத்தகைய அறிவிப்பை மத்திய நுகர்வோர் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு களுக்கும், திருப்தி இல்லாத சேவையை பெறும் வாடிக்கை யாளருக்கு சேவை வரியை அளிக் காமலிருக்கும் உரிமை உண்டு என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்களில் சாப்பிடும் பெரும்பாலான நுகர்வோர் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். விடுதிகள் மிக மோசமாக சேவை அளித்தாலும் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன் படி, எந்த ஒரு விற்பனையும் முறையற்ற வகையிலோ நுகர்வோருக்கு திருப்தி அளிக்காத வகையிலோ இருப்பின் அதற்குக் கட்டணம் விதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது. இவ்விதம் கட் டாயமாக வசூலிக்கப்படும் சேவைக் கட்டணமானது முறையற்ற வர்த்தக நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள் ளது. இது தொடர்பாக நுகர்வோர் தங்களது புகாரை உரிய அமைப் பில் பதிவு செய்யலாம் என குறிப் பிட்டுள்ளது. இது தொடர்பாக இந் திய ஹோட்டல் சங்கத்திடமிருந்து விரிவான விளக்கத்தை நுகர்வோர் துறை கேட்டிருந்தது. சேவை வரி செலுத்துவதானது முழுக்க முழுக்க சேவையைப் பெறும் நுகர்வோரின் உரிமை என ஹோட்டல் சங்கம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மாநிலங்களுக்கு நுகர்வோர் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தங்கள் மாநிலத் தில் உள்ள உணவகங்கள், விடுதி களில் அளிக்கப்படும் சேவைக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம், முழுக்க முழுக்க திருப்தியான சேவையைப் பெற்றால் மட்டுமே அளிக்க வேண்டும். இதை ரத்து செய்யும் அதிகாரம் நுகர்வோருக்கு உள்ளது. இந்த விவரத்தை அனைத்து உணவகங்களிலும் நுகர்வோருக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சேவைக் கட்டணமானது முழுக்க முழுக்க வாடிக்கையாளர் தாமாக முன்வந்து அளிப்பதாகும். சேவை திருப்திகரமானதாக இருப்பின் மட்டுமே இதை அளிக்கலாம். இல்லையெனில் இதை ரத்து செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x