வணிக நூலகம்: மோதலும் கடந்து போகும்!

வணிக நூலகம்: மோதலும் கடந்து போகும்!
Updated on
3 min read

பரபரப்பும், போராட்டங்களும் நிறைந்த இன்றைய நமது வாழ்க் கைச் சூழலில் மோதல்களுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமேயில்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள் என ஏதோ ஓரிடத்தில் அவ்வப்போது சிறு சிறு மோதல் உருவாகிவிடுகிறது!. அதுவும் பணியில் ஏற்படும் மோதல்கள் பல பெரிய பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடுகின்றன என்பதே உண்மை.

மோதல்கள் வாடிக்கையானதுதான் என்றாலும், அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதே, எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறதா அல்லது ஆரோக்கியமானதாக மாறுகின்றதா என்பதை தீர்மானிக்கின்றது. மோத ல்களின் ஆதி முதல் அந்தம் வரையிலான அனைத்து விஷயங்களையும் தெளிவாக விவரிப்பதுடன், மோதல்களுக்கான தீர்வுகளையும் சொல்கிறது “டீலிங் வித் கான்ஃபிளிக்ட்” என்னும் இந்தப் புத்தகம். மோதல்களின் அடிப்படை, மோதல்களின் மீதான மதிப்பீடு மற்றும் மோதல்களுக்கான தீர்வு என மூன்று தனித்தனி பிரிவுகளாகக் கொடுத்துள்ளார் இதன் ஆசிரியர் “அமி கெல்லோ”.

பாதகங்கள் பல!

உறவுமுறைகளில் ஏற்படும் சீர்கேடே மோதல்களினால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு என்கிறார் ஆசிரியர். இதற் கடுத்து, வேலைகளில் ஏற்படும் தடை மற்றும் சுணக்கம். இது நம் முன்னேற் றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாகி விடுகிறது. என்னதான் சிறந்த திட்ட மிடலுடன் நாம் ஒரு செயலை செய்து கொண்டிருந்தாலும், ஒரு சில சிறிய சச்சரவுகூட நமக்கு பெரும் வில்லனாக மாறிவிடும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் வைக்கவேண்டியது அவசியம். அதுபோலவே மோசமாக கையாளப்படும் மோதல்களும், கவ னத்திலேயே எடுத்துக்கொள்ளப்படாத அல்லது தவிர்க்கப்படும் சூழ்நிலை களும் அதீத மோசமான விளைவு களையே உண்டாக்கும் என எச்சரிக் கிறார் ஆசிரியர்.

பொதுவாக மோதல்கள் உணர்வு களுடன் தொடர்புடையது. மோதல் களின் சூழ்நிலைகளில் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், இரு தரப் பிற்கும் ஏற்படும் தொல்லைகள் அதிகம். அடுத்த முக்கியமான பாதிப்பு கால விரயம். ஆம், மோதல்களின் மீதான சிந்தனை மற்றும் வாக்கு வாதம் ஆகியவற்றினால் நமது பொன்னான நேரங்கள் பெருமளவு வீணடிக்கப்படுகிறது. ஆக முடிந்தள விற்கு அவற்றிலிருந்து விடுபட்டு, விரைவாக வெளிவருவது அவசியம்.

அடுத்த முக்கியமான பாதிப்பு, தொடர்ச்சியான மோதல்களினால் நமக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினை கள். தீவிர கோபமானது இதய நோய் களுக்கான வாய்ப்பினை அதிகப் படுத்துவதாக சொல்கிறது டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் நடத்திய ஆய்வு ஒன்று. மாரடைப்பு, பக்கவாதம், சீரற்ற இதயத்துடிப்பு, தூக்கமின்மை, உணவுமுறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு என இதன் பாதிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

நன்மைகளும் உண்டு!

எப்போதெல்லாம் மோதல்கள் திறம்பட கையாளப்படுகிறதோ, அவ்வித சூழ்நிலைகளில் மோதல்களினால் நேர்மறை விளைவுகளும் ஏற்படவே செய்கின்றது என்கிறார் ஆசிரியர். அதீத படைப்பாற்றல், புதிய எண்ணங் களின் உருவாக்கம், வலுவான உறவு முறைகள் என பலவித நன்மை களுக்கும் இதில் இடமுண்டு. இரு பணியாளர்களுக்கிடையே உருவாகும் மோதல், அவர்களை வழக்கத்தைவிட அதிகமாக உழைக்க வைக்கிறது. ஆம், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு தங்களது செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் போது, அது நிறுவன வளர்ச்சிக்கும் நன்மை பயக்குவதாகவே இருக்கின்றது.

மோதல்களின் மீதான தீர்விற்காக புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற் கும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு மான வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக் கின்றது. இதன்மூலம் உறவுமுறையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதற்கும், அதன் பலனாக நீடித்த புரிதல் உருவாவதற்கும் உகந்த சூழ்நிலையைப் பெறமுடிகின்றது.

சி.பி.பி குளோபல் என்னும் நிறுவனத்தின் ஆய்வின்படி, ஒரு சராசரி மனிதன் கிட்டத்தட்ட வாரத்திற்கு மூன்று மணிநேரங்களை பணியில் உருவாகும் மோதல்களை கையாள்வதற்காக செலவு செய்கிறான். அதே நிறுவனத்தின் மற்றொரு ஆய்வானது, நிறுவன மேலாளர்கள் தங்களது நேரத்தில் சுமார் பதினெட்டு சதவீதம் முதல் இருபத்தாறு சதவீதம் வரை, மோதல்களின் மீதான தீர்வுகளுக்காக செலவு செய்கிறார்கள் என்கிறது. ஆக, மோதல்களின் இறுதியில் கிடைக்கும் நன்மைகளை பெறுவதற்காகவே இவ்வித நேரங்கள் செலவழிக்கப்படுகின்றன என்பதை உணர்வோம்.

சுய விழிப்புணர்வு!

ஒரு விஷயத்தை சரியான விழிப்புணர்வுடன் எதிர்நோக்கும்போது, அதன் அடுத்தகட்ட செயல்பாடுகளை சிரமமின்றி எதிர்கொள்ள முடிகின்றது. அதுபோலவே, மோதல்களை எதிர் கொள்ளத் தேவையான ஆரோக்கிய மான சுய விழிப்புணர்வினை மேம்படுத் திக்கொள்ள வேண்டும். இப்போதைய மற்றும் முந்தைய காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட மோதல்கள் பற்றிய சில கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

அதாவது, மோதலின் முக்கிய காரணியாக நீங்கள் இருந்துள்ளீர்களா?, முந்தைய மோதல் ஒன்றில் உங்களது செயல்பாட்டிற்கான பலன் என்ன?, முன்னாளில் ஏற்பட்ட மோதலின் நினைவுகளால் உங்களிடம் தற்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?, அதை முற்றிலும் மறக்க நினைக்கிறீர்களா? முந்தைய மோதலின் பதற்றமான சூழலில் உங்களது நிலை என்ன? உங்களது குடும்பத்திலோ அல்லது வெளியிடங்களிலோ, மோதல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?, நீங் கள் பணியாற்றும் நிறுவனம் மற்றும் நீங்கள் சார்ந்துள்ள குழுவின் அணுகு முறைகள் என்ன? ஆகிய கேள்வி களுக்கு உங்களிடமிருந்து கிடைக்கும் பதில்களே, உங்களது சுய விழிப்புணர் வின் மேம்பாட்டிற்கான காரணிகள்.

என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கும் உங்களது சக பணி யாளர் ஒருவருக்கும் ஒரு சிறு மோதல் ஏற்பட்டுள்ளதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். அவ்வித சூழலில் நீங்கள் செய்யவேண்டியவையாக ஐந்து விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். முதலாவது, உங்களது சகாவை சரியாகப் புரிந்துக்கொள்வது. இரண்டாவது, எதிர்கொள்ளும் மோதலின் தன்மையை அறிந்துக் கொள்வது. மூன்றாவது, நிறுவனச் சூழ்நிலையை சரியாக உணர்ந்துக் கொள்ளுதல். நான்காவது, மோதலின் தீர்விற்கான இலக்கினை தீர்மானம் செய்தல். ஐந்தாவது, தீர்வை நோக்கிய பணிக்கான செயல்பாட்டு முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது. இதே முறையில் ஒவ்வொரு மோதலையும் கையாளும்போது, நல்ல தீர்வினைப் பெறலாம் என்பதே ஆசிரியரின் வாதம்.

பேசலாம் வாங்க!

பேச்சுவார்த்தையின் மூலமாக பல பெரிய பெரிய மோதல்கள் கூட எளிதாக தீர்க்கப்பட்டுவிடுவதைக் காண்கிறோம் அல்லவா! சரியான முறையில் மேற் கொள்ளப்படும் உரையாடல்கள் மற்றும் விவாதங்களின் மூலமாக, மோதலுக் கான சிறந்த தீர்வினைப் பெறமுடிகின் றது. இதற்கு முதலில் செய்யவேண் டியது, மனதளவில் விவாதத்திற்கு தயா ராவதே. ஆம், பேசி தீர்த்துக்கொள்ள லாம் என்று முடிவெடுத்துவிட்டாலே, அது பாதி வெற்றிக்கு சமம் என்பதை மனதில் நிறுத்துவோம்.

விவாதத்தின்போது எதிர்தரப்பின ரின் பார்வையிலிருந்து பிரச்சினையை அணுக வேண்டியது அவசியமான ஒன்று. இதுவே ஆரோக்கியமான விவா தத்திற்கு மிகச்சிறந்த அடித்தளமாக அமையும். இவைதவிர விவாதத்திற் கான காலநேரம், விவாதிக்கும் இடம், உபயோகப்படுத்தும் வார்த்தைகள், சரியான வழிகாட்டுதல்கள், நம் முடைய உணர்வுகளை மட்டுமல்லா மல் எதிர்தரப்பு உணர்வுகளையும் கையாளும் விதம், மாற்றுக்கருத்திற் கான அங்கீகாரம் என அனைத்து முக்கிய காரணிகளையும் திறம்பட கையாளும்போது, விவாதத்தின் முடிவு சாதகமானதாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மோதல்கள் தவிர்க்க முடியா தவையே என்றாலும், தீர்க்க முடியா தவை அல்ல. நிலைமையை துல்லிய மாக மதிப்பிட்டு, உணர்வுகளை சரியாகக் கையாண்டு, செயலாற்றும்போது எவ்வித மோதலும் தீர்க்கப்படக்கூடிய ஒன்றே என்பதை அறிவோம்.

தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in