Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

டி.வி.மோகன்தாஸ் பாய் - இவரைத் தெரியுமா?

#மணிபால் குளோபல் எஜுகேஷன் நிறுவனத்தின் தலைவர். இதற்கு முன்பு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்.


#1994-ம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலைக்குச் 
சேர்ந்த இவர், இயக்குனர் குழு உறுப்பினர், இன்ஃபோஸிஸ் பி.பி.ஓ.வின் தலைவர், தலைமை நிதி அதிகாரி, மனிதவளப் பிரிவு உள்ளிட்ட பல பொறுப்புகளைக் கையாண்டவர்.


#இரண்டு முறை சிறந்த தலைமை 
நிதி அதிகாரிக்கான
(சி.எஃப்.ஒ) விருதினை பெற்றிருக்கிறார்.

#கேல்கர் கமிட்டி, செபியின் இயக்குனர் குழு உள்ளிட்ட மத்திய அரசின் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.


#பெங்களூருவில் இருக்கும் அக்‌ஷ்ய பாத்ரா அறக்கட்டளையில் கவனம் செலுத்தி வருகிறார். 
மேலும், ஆரின் கேபிட்டல் (Aarin Capital) என்ற 
வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.


#சார்டட் அக்கவுண்டான இவர், பெங்களூரு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பும், செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.காமும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x