

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) நிறைவேறுவது குறித்து மாநில நிதி அமைச்சர்களை டெல்லியில் செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்திக்க இருக்கிறார்.
மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் இழுபறியில் உள்ளது.
அதிகாரமளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்கள் குழுவை ஜேட்லி சந்தித்த பிறகு இந்த மசோதா மாநிலங்களைவையில் நடப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்த மசோதாவுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ஜேட்லி சந்தித்தார்.
நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க 5 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொல்கத்தாவில் மாநில நடந்த நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய ஜேட்லி, தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் அல்லது ஆதரவு தெரிவித்துள்ளன என்றார்.