

தெலுங்கானாவில் 10,599 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக உள்ள அனல்மின் நிலையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். என்டிபிசி நிறுவனம் இங்கு இரண்டு கட்டமாக இந்த அனல்மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது.
முதல் கட்டமாக 1600 மெகாவாட் திறன் கொண்ட நிலையத்தையும் இரண்டாவது கட்டமாக 2400 மெக வாட் திறன் கொண்ட நிலையத்தை யும் என்டிபிசி நிறுவனம் அமைக்க இருக்கிறது.
இந்த அனல்மின் நிலை யம் தெலுங்கானாவில் ராமகுண்டம் என்ற இடத்தில் அமைய இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவ தற்கு 10,599 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-ன் படி என்டிபிசி நிறுவனம் 4000 மெகாவாட் மின்சாரத்தை தெலுங்கானா மாநிலத்துக்கு வழங்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்துக்கு மின்சாரம் வழங்குவதற்காக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் கடந்த வருடம் ஒடிசாவில் மந்தாகினி-பி நிலக்கரி சுரங்கத்தை என்டிபிசி நிறுவனத்திற்கு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.