

$ ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர். மிகச் சிறந்த பொருளாதார நிபுணர். வங்கியாளர், ஆலோசகர் என்ற பன்முகம் கொண்டவர்.
$ லண்டன் பொருளாதார கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் எம்ஃபில் பட்டமும் பெற்றவர். யேல் பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர்.
$ 1991 முதல் 1995-ம் ஆண்டு சர்வதேச செலாவணி நிதியத்தில் (ஐஎம்எப்) பணிபுரிந்துள்ளார்.
$ 1995-ல் அயல் பணியாக ஐஎம்எப் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கியில் வெளிப்பணி அதிகாரியாக பணியாற்றினார்.
$ கடன் சந்தை, வங்கி சீர்திருத்தம், ஓய்வூதிய நிதி சீர்திருத்தம் உள்ளிட்டவற்றில் ஆலோசகராக பணியாற்றினார்.
$ 1998 முதல் 2001 வரை மத்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரத்துறையின் ஆலோசகராக பணிபுரிந்தார்.
$ 2000 முதல் 2004 வரை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு குழுக்களில் பணிபுரிந்துள்ளார். போட்டி நிறுவன குழு, நேரடி வரி வருவாய் சிறப்புக் குழு, பிரதமரின் அடிப்படை கட்டமைப்புக்கான சிறப்புக் குழு, பங்குச் சந்தை ஆய்வு மற்றும் பகுப்பாய்வு குழுவின் ஆலோசகராக பணிபுரிந்துள்ளார்.
$ கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
$ இவர் அளித்த பரிந்துரையின்படி இனி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையை வெளியிட உள்ளது.