Published : 22 Feb 2014 12:17 PM
Last Updated : 22 Feb 2014 12:17 PM

2 லட்சம் விசைத்தறிகள் ஸ்டிரைக்: ரூ. 50 கோடி துணி உற்பத்தி பாதிப்பு

கூலி உயர்வை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் துவக்கியுள்ளதால், 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

கோவை, திருப்பூர் மாவட் டத்தில் அவிநாசி, பல்லடம், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் போடுவது வழக்கம்.

கோவை, திருப்பூர் மாவட் டத்தில் செயல்படும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு 2011ம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. மின் கட்டணம், உதிரிப்பாகங்கள், டீசல், போக்குவரத்து செலவி னங்கள் உயர்ந்து விட்டதால் கூலி உயர்வை விசைத்தறி உரிமை யாளர்கள் முன்வைத்தனர்.

இதையடுத்து, கோவை தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற, 8 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த வியாழக்கிழமை (பிப்.20ல்) நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் வெள்ளிக் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விசைத்தறி யாளர்கள் கூறுகையில், விசைத்தறி தொழிலில் மின் கட்டணம், உதிரிப்பாகங்கள், டீசல், போக்குவரத்து செலவி னங்கள் உயர்ந்து விட்டதால், தொழில் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. அதே சமயம், தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

தொழில் நெருக்கடியான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதால், இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு ரூ50 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேரடியா கவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். இப் பிரச்சினையில் அரசு தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x