Published : 28 Sep 2016 10:32 AM
Last Updated : 28 Sep 2016 10:32 AM

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் ஏப்ரலுக்குள் பட்டியலிடப்படும்: அனில் அம்பானி தகவல்

ரிலையன்ஸ் கேபிடல் குழுமத்தில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக் குள் பட்டியலிடப்படும் என்று ரிலையன்ஸ் கேபிடல் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார். தவிர இன்ஷூரன்ஸ் நிறுவனமும் சரியான நேரத்தில் பட்டியலிடப் படும் என்றும் கூறினார்.

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத் தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அம்பானி மேலும் கூறியதாவது:

ரிலையன்ஸ் கேபிடல் குழுமத்தில் இருக்கும் ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு, வர்த்தகக் கடன் உள்ளிட்ட பிரிவுகளை சரியான தருணத்தில் பட்டியலிடுவோம். அதற்காக உடனடியாக கட்டாயம் பட்டிய லிடுவோம் என்பது கிடை யாது. தேவைப்படும் பட்சத்தில் பங்குதாரர்களின் நலன் பாதிக்காத வகையில் பட்டியலிடப்படும். மேலும் ஒவ்வொரு வருடமும் டிவிடெண்ட் வழங்க முடிவெடுத் திருக்கிறோம்.

ரிலையன்ஸ் கேபிடல் குழுமத் தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது. ரிலையன்ஸ் கேபிடல் குழுமத் தில் நிதிச்சேவைகள் பிரிவில் கவனம் செலுத்துவோம். முக்கிய மல்லாத தொழில்களில் இருந்து விலகி, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுப்போம்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவது இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான மாற்றமாக இருக்கும். தற்போது நிதிச்சேவை துறைக்கு சந்தையில் உள்ள வாய்ப்புகளை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு தேவையான 2ஜி,3ஜி,4ஜி ஸ்பெக்ட்ரம் இருக்கி றது. ரிலையன்ஸ் ஜியோவுடனான மெய்நிகர் (virtual) இணைப்பு முடிந்துவிட்டது. தவிர ஸ்பெக்டரம் அலைவரிசையை பகிர்ந்து கொள்ளுதல், ஸ்பெக்ட்ரம் வர்த்தக ஒப்பந்தங்களும் முடிந்துவிட்டன. எதிர்காலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முக்கிய சந்தையை வைத்திருக்கும்.

தற்போது ஏர்செல் உடன் இணைந்திருப்பதால் 12 வட்டங் களில் முதல் இடத்தில் நிறுவனம் இருக்கிறது. 4ஜி சேவை தொடங்கி 90 நாட்களுக்குள் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்ற னர். இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறுவனத்தின் கடன் 75 சதவீதம் குறையும் என்று கூறினார்.

இயக்குநர் குழுவில் அன்மோல்

அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல் இயக்குநர் குழுவில் இணைந்திருக்கிறார். அவர் இயக்குநர் குழுவில் இணைந்த பிறகு அந்த பங்கு 40 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அன் மோல் அதிர்ஷ்டசாலி என்று அனில் கூறினார். மேலும் இந்த `அன்மோல் விளைவு’ தொடரும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, 24 வயதாகும் அன்மோலை இயக்குநர் குழுவில் கொண்டுவர அனுமதி வழங்கியதற்கு அனைத்து பங்குதாரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் சராசரி வயது 30க்குள் இருக்கிறது. அதேபோல ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் சராசரி வயதும் 34 ஆகும். இந்த இளைய குழு பங்குதாரர்களுக்கு நல்ல மதிப்பை கொடுக்கும் என்று கூறினார்.

அன்மோல் இங்கிலாந்து வார் விக் கல்லூரியில் எம்பிஏ படித்தவர். நிறுவனத்தில் இருவருட பயிற்சிக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி இயக்குநர் குழுவில் இணைந்தார். அன்மோல் இயக்குநர் குழுவில் இணையும்போது ஒரு பங்கு 467 ரூபாயில் இருந்தது. நேற்று 556 ரூபாயில் முடிவடைந்தது. 2014-ம் ஆண்டு முதல் ரிலை யன்ஸ் கேபிடல் குழும நிறுவனங் களில் பணியாற்றி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x