

இந்தியாவில் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 90.61 கோடியைத் தொட்டுள்ளது. மாதந்தோறும் 0.19 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்துவருவதாக தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நகர்ப்பகுதிகளில் புதிதாக இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, கிராமப்பகுதிகளில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது.
ஜூலை மாதத்தில் நகர்ப்பகுதிகளில் செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 54.89 கோடியாகக் குறைந்துள்ளது. கிராமப்பகுதிகளில் செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 35.55 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் பல்வேறு செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களிடம் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதற்காக 10 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
பிராட்பேண்டு உபயோகிப்பாளர் எண்ணிக்கை 1.52 கோடியாக அதிகரித்துள்ளது. கம்பியில்லா தொலைத் தொடர்பு சேவை உபயோகிப்போர் எண்ணிக்கை மொத்தம் 87 கோடியாகும். ஆகஸ்ட் மாதத்தில் இது 0.21 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ள. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய அரசு நிறுவனங்கள் தலா 11 சதவீத சந்தையைப் பிடித்துள்ளன.