

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் லவாசா நிதித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக இவர் செலவுகள் பிரிவின் செயலாளராக இருந்தார். 1980-ம் ஆண்டு ஹரியானா மாநில ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர். பொருளாதார துறை விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் பேட்சினை சேர்ந்தவர் என்பது முக்கியமானது.
முன்பு நிதித் துறை செயலாளராக இருந்த ராஜன் வாட்டால் ஓய்வு பெற்றதையடுத்து இந்த பதவி காலியாக இருந்தது. ராஜன் வாட்டால் இப்போது நிதி ஆயோக் அமைப்பின் மூத்த ஆலோசகராக (சிறப்பு) இருக்கிறார்.
மத்திய அரசின் பல்வேறு பிரிவு களில் இவர் பணியாற்றி உள்ளார். விமான போக்குவரத்து துறை அமைச்சகம், சுற்றுச் சூழல் அமைச் சகம் மற்றும் மின் துறை உள்ளிட்ட பல துறைகளில் இவர் பணிபுரிந் திருக்கிறார். நிதித்துறை அமைச் சகத்தில் உள்ள ஐந்து செயலாளர் களில் மூத்தவர் நிதிச் செயலாளராக நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியா வில் உள்ள சதர்ன் கிராஸ் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். ஐஏஎஸ் பணிக்கு வருவதற்கு முன்பு சில காலம் ஆங்கில விரிவுரை யாளராகவும் பணியாற்றியவர்.