Published : 22 Apr 2017 11:04 AM
Last Updated : 22 Apr 2017 11:04 AM

கறுப்புப் பணம்: ஏப்.30 வரை கால அவகாசம்

வருமான வரி கணக்கில் காட்டப்படாத பணத்தை தாக்கல் செய்வதற் கான கால அவகாசம் இம்மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்காக மத்திய அரசு `பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப் பட்டது. அப்போது மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப் பட்டது. வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் இத்திட்டத் தின் படி, தெரிவிக்கும் தொகையில் 50% வரியாக பிடித்தம் செய்யப் படும். எஞ்சியுள்ள 50 சதவீதத்தில் 25% பிஎம்ஜிகேஒய் டெபாசிட் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும். இதற்கு எவ்வித வட்டியும் வழங்கப்பட மாட்டாது. இந்த திட்டத்திற் கான காலஅவகாசம் இப்போது ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களின் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டால் 77.25% அபராதமும், வரி தாக்கல் செய்யாததற்கு 10% கூடுதல் அபராதமும் விதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x