

வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரே சீரான வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. சிஐஐ-யும், எர்னஸ்ட் யங் அமைப்பும் அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் சர்வதேச அளவில் ஒரே சீரான வரி விதி முறைதான் பல நாடுகளில் பரவலாக பின்பற்றப்படுகிறது. அத்தகைய சூழல் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் அடிப்படை வரி விதிப்பு முறையைக் கட்டி க்காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதேசமயம் முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால் அதற்கேற்ப சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரே சீரான வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நமது நாட்டுக்கு இப்போது தேவை ஒரே சீரான வரி வதிப்பு முறை. அது எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும், சர்வதேச போட்டிகளை எதிர்கொள்ளும் வகையிலும் இருத்தல் அவசியம். சர்வதேச அளவில் பின்பற்றப்படும் வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து அதை அமல்படுத்தலாம் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இப்போதுள்ள வரி விதிப்பு முறையில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் வரி செலுத்துவோர் பல சமயம் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இத்தகைய நிலை வரி செலுத்துவோர் மத்தியில் ஸ்திரமற்ற சூழலையே உருவாக்கும்.
ஜி 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்படி 15 பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டன. இந்த பரிந்துரைகளை அமல்படு த்துவதன் மூலம் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள முடியும் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர, வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) வரி தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்கும்படியும் இதன் மூலம் வரி செலுத்துவோரின் வரிமாற்று கட்டண ஆவணத்தை எளிதாக மாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மின்னணு முறையிலான வரி விதிப்பு முறைகள் இரட்டை வரி விதிப்பு முறைகளை மேலும் எளிமையாக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.