

எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 38 கோடி டாலர் (ரூ. 2,500 கோடி) கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா கோதாவரி படுகை யில் கிழக்குப் பிராந்தியத்தில் டி6 எண்ணெய் வயலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைந்த அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ததற்காக இந்த அபராதம் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக அதாவது ஏப்ரல் 1, 2010-ம் ஆண்டிலிருந்து இதுவரை 276 கோடி டாலர் ஒட்டுமொத்தமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத் தின்படி (பிஎஸ்சி) ரிலையன்ஸ் மற்றும் அதன் கூட்டாளி நிறுவனங் களான பிரிட்டிஷ் பெட்ரோலியம் பிஎல்சி மற்றும் கனடாவின் நிகோ ரிசோர்சஸ் ஆகிய நிறுவனங்கள் எரிவாயு விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் எரிவாயு உற்பத்தி குறைந்தபோதிலும் வாயு விலை உயர்வு காரணமாக அரசின் லாப பங்கு அதிகரித்துள்ளது.
கிருஷ்ணா கோதாவரி படுகையின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள திருபாய் 1 மற்றும் 3 ஆகிய எரிவாயு வயலில் 8 கோடி கியூபிக் மீட்டர் அளவுக்கு தினசரி எரிவாயு உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் ஆனால் தினசரி 3 கோடி கியூபிக் மீட்டர் அளவுக்கே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான முடிவை அரசு மேற் கொள்கிறது. 2015-2016-ம் ஆண் டுக்கான விலை இதுவரை வெளியிடப்பட்டவில்லை.