

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அவருடைய வெளிநாட்டு சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகளை அமலாக்கத்துறை தொடங்கி உள்ளது.
வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா தற்போது இங்கிலாந் தில் வசித்து வருவது குறிப்பிடத் தக்கது. அவரிடம் இருந்து கடனைத் திரும்ப பெறும் முயற்சியில் அமலாக்கத்துறை பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. விஜய் மல்லையாவுக்கு சொந் மான ரூ.8,041 கோடி மதிப்புள்ள சொத்துகளை இதுவரை அமலாக் கத்துறை முடக்கியுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணிகளில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. தற்போது அவருடைய வெளிநாட்டு சொத்து களை முடக்குவதற்கு அமலாக்கத் துறை குறிவைத்து உள்ளது.
இதுவரை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் படி (பிஎம்எல்ஏ) மல்லையாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அடுத்த முறை குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துகளைப் பறிமுதல் செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஜய் மல்லையாவை தேடப் படும் குற்றவாளியாக மும்பை யில் உள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. ஆனால் அதன் பிறகும் அமலாக்கப் பிரிவு முன் விஜய் மல்லையா ஆஜராகவில்லை.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் விஜய் மல்லையாவிற்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கான பணிகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்று தெரியவந்து உள்ளது.
இருப்பினும் எவ்வளவு மதிப்பிலான சொத்துகள் இப்போது பறிமுதல் செய்யப்பட உள்ளன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. சில ஆயிரம் கோடி அளவி லான சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாக என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச போலீஸ் மூலமாக விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் முயற்சியில் புதிய குற்றப் பத்திரிக்கையை தாக்கல்செய்ய அமலாக்கப்பிரிவு முன்வந்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இரண்டாவது முறையாக விஜய் மல்லையாவின் பார்ம்ஹவுஸ், வீடுகள் மற்றும் வைப்புத்தொகை உட்பட ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.