

ஏற்றுமதி செய்வதில் உள்ள விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி 25 ஆயிரம் டாலர் மதிப்பிலான சரக்குகள் மற்றும் சாஃப்ட்வேர் சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
இதற்காக பொதுவான ஏற்றுமதி குறித்த விண்ணப்பம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து வகையான ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் குறித்த விவரங்களைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. சாஃப்டெக்ஸ் விண்ணப்பம் எனப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்து மென்பொருள்களை ஏற்றுமதி செய்யலாம். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள இடிஎஃப் மற்றும் பிபி படிவங்களுக்கு மாற்றாக புதிய படிவம் அமையும்.இனி எஸ்டிஎஃப் படிவம் மட்டுமேபோதுமானது.
இந்த விண்ணப்பத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவற்றின் மதிப்பு 25 ஆயிரம் டாலருக்குக் குறைவானதாக இருத்தல் அவசியமாகும்.
புதிய நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.