Published : 02 Jun 2016 10:26 AM
Last Updated : 02 Jun 2016 10:26 AM

ஹூண்டாய் விற்பனை 1.9% உயர்வு

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மே மாத விற்பனை 1.9 சதவீதம் உயர்ந்து 53,516 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த வருடம் இதே காலத்தில் 52,514 வாகனங்கள் விற்பனையாகின.

உள்நாட்டில் விற்பனை வளர்ச்சி 10.41% உள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 37,450 வாகனங்கள் விற்பனையானது. இப்போது 41,351 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இருந்தாலும் ஏற்றுமதி 21% சரிந்திருக்கிறது. கடந்த வருடம் மே மாதத்தில் 15,064 வாகனங்கள் விற்பனையானது. இப்போது சரிந்து 11,805 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

டீசல் வாகனங்கள் மீதான எதிர் காலம் கேள்விக்குறியாக இருந்த போதிலும் உள்நாட்டில் 10% மேல் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணைச் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தாவா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x