சாப்ட்பேங்க் தலைவர் பதவியில் இருந்து நிகேஷ் அரோரா ராஜினாமா

சாப்ட்பேங்க் தலைவர் பதவியில் இருந்து நிகேஷ் அரோரா ராஜினாமா
Updated on
2 min read

சாப்ட்பேங்க் நிறுவனத்தின் தலைவர் நிகேஷ் அரோரா திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் நிறுவனத்தின் நிறுவனர் மசாயோஷி சன்னுக்கு பிறகு நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்துபவர் என்று அறிவிக்கப்பட்ட நிகேஷ் அரோரா ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனத்தில் இருந்து இரு வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்தார். அதே சமயம் நிறுவனத்தின் ஆலோசகராக வரும் ஜூலை 1 முதல் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ராஜினாமா மூலம் அடுத்து என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிக்க முடியும் என்று அரோரா தெரிவித்திருக்கிறார்.

மென்பொருள் விநியோகம் செய்யும் நிறுவனமாக 1981-ம் ஆண்டு சாப்ட்பேங்க் தொடங்கப் பட்டது. 2006-ம் ஆண்டு வோட போன் நிறுவனத்தின் ஜப்பானிய செயல்பாடுகளை வாங்கி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு ஸ்பிரின்ட் நிறுவனத்தை யும் சாப்ட்பேங்க் வாங்கியது.

கடந்த இரு வருடங்களாக நிகேஷ் அரோரா 400 கோடி ரூபாய் அளவுக்கு சாப்ட்பேங்க் நிறுவனத் துக்காக ஸ்டார்ட்அப் நிறுவனங் களில் முதலீடு செய்திருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் 36-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்கிறார்.

நிகேஷ் அரோரா சாப்ட்பேங்க் நிறுவனத்தில் மட்டுமல்லாமல் அமெரிக்காவை சேர்ந்த இன்னொரு நிறுவனத்திலும் ஆலோசகராக இருப்பதால், சாப்ட்பேங்க் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அரோரா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அவர் மீது எனக்கு 1,000 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது என்று மசாயோஷி சன் கூறியிருந்தார். தவிர இவரை விசாரிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த குழு அரோரா மீது எந்த தவறும் இல்லை என்று அறிக்கை அளித்த அடுத்த நாள் அரோரா ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய 60-வது வயதில் (தற்போது 58) நிறுவனத்தை அவர் வசம் கொடுக்க நினைத்திருந்தேன். ஆனால் இன்னும் செய்ய வேண் டிய வேலைகள் உள்ளன. இன் னும் சில யோசனைகளில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் இன்னும் 5 முதல் 10 வருடங்களில் நானே தலைமைச் செயல் அதிகாரியாக இருக்க முடி வெடுத்திருக்கிறேன். இவ்வளவு காலத்துக்கு நிகேஷ் அரோரா காத்திருக்க முடியாது என்று மசாயோஷி சன் கூறியிருக்கிறார்.

இதில் கவலைப்பட ஏதும் இல்லை. நான் நிறைய கற்றுக் கொண்டேன். சிறப்பு குழு என்மீது குற்றச்சாட்டு இல்லை என்று கூறிவிட்டது. இந்த நிலையில் வெளியேறுவது சரியாக இருக்கும். அதே சமயத்தில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்று அரோரா டிவிட்டர் மூலம் கூறியிருக்கிறார்.

கடந்த நிதி ஆண்டில் இவரது சம்பளம் 500 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாப்ட்பேங்க் நிறுவனம் இந்தி யாவில் இதுவரை 100 கோடி டாலர்கள் முதலீடு செய்திருக் கின்றன. ஸ்நாப்டீல், ஓலா கேப்ஸ், ஓயா ரூம்ஸ், ஹவுசிங் டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. வருங்காலங்களில் 1,000 கோடி டாலர் முதலீடு செய்ய சாப்ட்பேங்க் திட்டமிட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in