Published : 23 Apr 2017 11:20 AM
Last Updated : 23 Apr 2017 11:20 AM

95 சதவீத பொறியியல் மாணவர்கள் சாப்ட்வேர் வேலைக்கு தகுதியில்லை: ஆய்வு முடிவு முட்டாள்தனமானது என மோகன் தாஸ் பாய் கருத்து

இந்தியாவில் பொறியியல் படித்த 95 சதவீதம் நபர்கள் மென்பொருள் பணிக்கு தகுதி இல்லாதவர்கள் என சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவை டி.வி.மோகன் தாஸ் பாய் கடுமையாக சாடியுள்ளார். இந்த ஆய்வு முற்றிலும் முட்டாள்தனமானது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பொறியியல் படித்து வெளிவரும் 95 சத வீதம் மாணவர்கள் சாப்ட்வேர் மேம்பாட்டு பணிக்கு தகுதியல்லா தவர்கள் என ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் என்ற நிறுவனம் மேற் கொண்ட ஆய்வில் தெரியவந்துள் ளது. மேலும் வேலைக்கான அடிப்படை புரோகிராமை 4.77 சதவீதம் மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதுகிறார்கள் எனவும் அந்த ஆய்வு கூறியது.

கிட்டத்தட்ட 500 பொறியியல் கல்லூரிகளில் 36,000 கணினி பிரிவை சேர்ந்த மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்களிடம் சாப்ட்வேர் டெவலெப்மெண்ட் மற்றும் அடிப்படையான புரோகிராம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோருக்கு அடிப்படை விவரங்கள் கூடத் தெரியவில்லை என ஆய்வு முடிவு கூறுகிறது.

மணிப்பால் கல்வி நிறுவனத் தின் தலைவர் டி.வி. மோகன் தாஸ் பாய் இந்த ஆய்வு முடிவை கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் இந்த ஆய்வு முட்டாள் தனமானது என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு தொடர்பாக பயோகான் நிறுவனத்தின் தலை வர் கிரண் மஜும்தாரும் கருத்து தெரிவித்துள்ளார். ``மோகன் தாஸ் பாய் கருத்தை நான் ஆதரிக் கிறேன். இந்த ஆய்வு எந்த அனு மானத்தின் படி எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. என கருத்து கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x