வரி ஏய்ப்பை அனுமதிக்க மாட்டோம்: அருண் ஜேட்லி

வரி ஏய்ப்பை அனுமதிக்க மாட்டோம்: அருண் ஜேட்லி
Updated on
1 min read

நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மக்களவையில் கருப்புப் பண விவகாரம் குறித்து பேசிய அவர் இதுவரை 427 கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இணக்கமான வரி விதிப்பு முறையைக் கையாள முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இத்தகைய சூழலை படிப்படியாகக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இப்போதுள்ள வரி விதிப்பு முறை நாட்டில் வரி ஏய்ப்புக்கு வழி வகுப்பதாகக் குறிப்பிட்ட அவர், நமது நாட்டில் அதிக வரி விதிப்பு முறையால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற தவறான அபிப்ராயம் நிலவுவதாகக் கூறினார்.

அதிக வரி விதிப்பால் அதிக வருமானம் வராது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் கணிசமான அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் அரசுக்கு வரும் வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் வரி ஏய்ப்பும் குறைந்துள்ளது என்றார்.

இதனால் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் வரி செலுத்த வேண்டியவர்கள் நிச்சயம் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்த அவசியம் இல்லாதவர்கள் அதற் காக நீதிமன்றங்களில் முறை யிடுகின்றனர். இதனால் எவ்வித பயனும் இல்லை. இருந்தாலும் வரி ஏய்ப்பை அரசு ஒருபோதும் அனுமதிக்காது அதேபோல வரி தவிர்ப்பையும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஹெச்எஸ்பிசி வெளியிட்ட கறுப்புப் பண கணக்குகளில் இதுவரை 427 கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பட்டியல் வெளியாகும் போது எந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள் இதில் உள்ளனர் என்ற விவரம் ஊடகத்துக்கு வெளியாகும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in