Published : 22 Feb 2017 10:04 AM
Last Updated : 22 Feb 2017 10:04 AM

புதுமுக ஐடி பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்: இன்ஃஃபோசிஸ் முன்னாள் சிஎப்ஓ மோகன்தாஸ் கருத்து

அதிகளவு பொறியியல் பட்டதாரி கள் இருப்பதால், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் குறைந்தபட்ச சம்பளத்தை ஐடி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது. இந்த சம் பளங்களை நிறுவனங்கள் உயர்த்த வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இப்போதைக்கு ஐடி துறையின் மிகப்பெரிய பிரச்சினை இதுதான். புதுமுக பணியாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க அவர்கள் முன் வருவதில்லை. தவிர நிறுவனங்கள் ஒன்றாக கூடி சம்பளத்தை ஏற்றக் கூடாது என முடிவு செய்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த பட்ச ஆண்டு சம்பளம் 2.25 லட்ச ரூபாய். ஆனால் இப்போது 3.5 லட்ச ரூபாய் என்னும் அளவில்தான் இருக்கிறது.

இது இந்திய ஐடி துறைக்கு நல்லதல்ல. இந்த நிலையை அவர் கள் உடைக்க வேண்டும். அதுவும் பெரிய நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று பேசி வைத்து முடிவெடுப் பதை நிறுத்த வேண்டும். புதுமுக பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியும், உயர் நிலை பணியாளர்களுக்கு சம்பளத்தை குறைக்கவும் ஐடி நிறுவனங்கள் முன்வர வேண்டும். சம்பளத்தை உயர்த்தவில்லை என்றால் தரமான பணியாளர்கள் கிடைக்க மாட்டார்கள்.

பெரும்பாலான பணியாளர்கள் இரண்டாம் கட்ட கல்லூரிகளில் இருந்துதான் வருகிறார்கள் என் பதில் சந்தேகம் இல்லை. ஆனால் முதல் நிலை கல்லூரிகளில் இருந் தும் வரவேண்டும். அவர்கள் வர வேண்டும் என்றால் சம்பளத்தை உயர்த்த வேண்டும். இது மிகப்பெரிய சவால். அதனை ஐடி நிறுவனங்கள் செய்ய வேண்டும்.

பல மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதால் ஐடி நிறுவனங்கள் கடந்த எட்டு ஆண்டு களாக புதுமுக பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தவில்லை. குறைந்த சம்பளத்தில் சேரும் பணியாளர்கள், சம்பளத்தில் திருப்தி இல்லாததால் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகின்றனர். அதிகபட்சம் மூன்று ஆண்டு களில் அவர்கள் வெளியேறிவிடு கின்றனர். ஐடி நிறுவனங்களில் பணியாளார்கள் வெளியேறும் விகிதம் அதிகமாக இருப்பதற்கு குறைந்த சம்பளமும் காரணம் என மோகன்தாஸ் பாய் தெரிவித்தார்.

1994-ம் ஆண்டு முதல் 2006 முதல் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். இன்ஃபோசிஸ் பிபிஓ இயக்குநர் குழு தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்போது மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x