

ஏப்ரல் மாதத்தில் இதுவரை ரூ.16,500 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 56,944 கோடி ரூபாய் வந்திருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திலும் அந்நிய முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஏப்ரல் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 13,531 கோடி ரூபாய் இந்திய கடன் சந்தையிலும், 2,997 கோடி ரூபாய் முதலீடு இந்திய பங்குச்சந்தைக்கும் வந்துள்ளது. 2017-ம் ஆண்டில் இதுவரை 85,156 கோடி ரூபாய் இந்திய சந்தைக்கு வந்துள்ளது.