நஷ்டத்தில் உள்ள 8 பொதுத்துறை நிறுவனங்களை மூட நிதி ஆயோக் பரிந்துரை
நஷ்டத்தில் இயங்கும் 8 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவ தற்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்திருக்கிறது. நஷ்டத்தில் இருக்கும் 74 நிறுவனங்களில் இருந்து இந்த 8 நிறுவனங் களை நிதி ஆயோக் தேர்ந்தெடுத் திருக்கிறது. இந்த நிறுவனங்களை மூடலாம் அல்லது விற்கலாம் என இந்த நடவடிக்கையில் ஈடுப்பட் டுள்ள ஒரு அதிகாரி தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகம் இந்த பரிந்துரைக்கு கொள்கை அளவி லான ஒப்புதல் வழங்கியவுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரவை நிர்வாகம் நிறுவனங்களை மூடுவதற் காக விரிவான திட்டத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். இதில் சொத்துகளை விற்பது, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் இழப்பீடு எவ்வளவு என்பது குறித்து திட்டமும் இருக்கும். மத்திய அமைச்சரவையின் அனுமதி பெற்ற பின்பே இந்த இந்த நடவடிக்கை தொடரும்.
முன்னதாக ஒரு நஷ்டமடைந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதனை விற்பதற்கான திட் டத்தை சமர்ப்பிக்குமாறு நிதி ஆயோக்கிடம் பிரதமர் அலுவல கம் கேட்டிருந்தது. நிதி ஆயோக் இரண்டு பட்டியலை சமர்ப்பித் திருந்தது. ஒரு பட்டியலில் நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களும் இன்னொரு பட்டியலில் நலிவ டைந்த பொதுத்துறை நிறுவனங்களும் இருந்தன. நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களை மூடுவ தற்கும், நலிவடைந்த நிறுவனங் களில் மத்திய அரசின் பங்குகளை விலக்கிக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
கடந்த பட்ஜெட் உரையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் குறித்த திட்டத்தை நிதி ஆயோக் தயாரிக்கும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.56,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
