

இந்தியாவின் முக்கிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா 500 விமானிகள் மற்றும் 1500 பைலட்டுகளை அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கான பணியாளர்களின் தேவை அப் போதைய நிலைமையை பொறுத்து அதிகரிக்கக்கூடும் என நிறுவனத் தின் மூத்த அதிகாரி குறிப்பிட்டார்.
விமான சேவையின் விரிவாக்கத்தைப் பொறுத்து நிறுவனத்துக்கு 700க்கும் மேற்பட்ட விமானிகளின் தேவை இருக்கும் என்றும், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இவர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தற்போது வரை 250 விமானிகளை பணியமர்த்தியுள்ளோம், மேலும் 500 விமானிகளை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளோம் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர் என். சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் 200 பயிற்சி விமானிகளை பணியமர்த்தியது. இதில் 78 பேர் தேர்வாகியுள்ளனர் என்று சிவராம கிருஷ்ணன் கூறினார்.