Published : 07 Nov 2014 09:53 AM
Last Updated : 07 Nov 2014 09:53 AM

பி.அசோக் - இவரைத் தெரியுமா?

# பார்சூன் குளோபல் 500 பட்டியலில் இருக்கும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர்.

# 57 வயதாகும் இவர், கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது நியமனம் கடந்த வருடம் அக்டோபர் மாதமே முடிவு செய்யப்பட்டுவிட்டாலும். இதற்கு முந்தைய அரசு முறையான நியமனத்தை வெளியிடவில்லை.

# தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு செய்யும் முதல் முக்கிய முடிவு இவரது நியமனம்தான். 33 வருடங்கள் இந்த துறையில் இருந்திருக்கிறார். 1981-ம் ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இணைந்தார். அதற்கு முன்பு இரு வருடங்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

# இதற்கு முன்பு நிர்வாக இயக்குநராக இந்த நிறுவனத்தில் பணியாற்றியவர். இவருக்கு சர்வதேச அனுபவமும் இருக்கிறது. வெளிநாட்டு வியாபாரத்தையும் கவனித்தவர். மலேசியா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தவர்.

# கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கும், குர்காவ்ன் நிர்வாக மேம்பாட்டு கல்லுரியில் நிர்வாக பயிற்சியும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x