

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு தங்கள் வங்கிக் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவ் விதம் டெபாசிட் செய்யப்பட்ட கணக்குளில் 18 லட்சம் பேரது கணக்குகளை வருமான வரித் துறை அடையாளம் கண்டுள்ளது.
இவர்களது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அதாவது ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு இ-மெயில் மூலமும், செல்போனில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும் வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு விளக்கம் அளிக்க பிப்ரவரி 10-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. இப்போது மேலும் 5 நாள் அவகாசம் கூடுதலாக அளிக்கப்படுவதாக கடந்த வாரம் சனிக்கிழமை (பிப்.11) வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதனால் இம்மாதம் 15-ம் தேதி வரை விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.